1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (13:41 IST)

அணுகுண்டு விதைத்த நிலத்தில் பயிரிடும் பெண்மணி

இஸ்ரேல் நாட்டில் பெண்மணி ஒருவர் இஸ்ரேல் ராணுவம் வீசிய குண்டுகளை சேகரித்து அதில் பூ செடிகளை வளர்த்து வருகிறார். இந்த புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது


 

 
போர்களுக்கு எதிராக உலகளவில் பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் வீசிய புகை குண்டுகளை சேகரித்து அதில் பூ செடிகளை வளர்த்து வருகிறார் அந்நாட்டு பெண்மணி.
 
அந்த பெண்மணி அழிவை ஏற்படுத்தும் குண்டுகளை பூந்தொட்டியாக மாற்றி அமைதியை போற்றும் வகையில் செயல்பட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலதளங்களில் வைரலாக பரவி வருகிறது.