புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (10:23 IST)

வானத்தில் பறந்து வந்த டார்த் வேடர்: ஆச்சர்யமாக பார்த்த மக்கள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பலூன் திருவிழாவில் இடம்பெற்றுள்ள பல வித்தியாசமான பலூன்களை மக்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர்.

2019ம் ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா லண்டனில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல நாடுகள் தங்கள் வித்தியாசமான பறக்கும் பலூன்களை பறக்கவிட்டு கொண்டாடி வருகின்றன.

இந்த விழாவில் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது டார்த் வெடார் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தின் தலையை போன்று செய்யப்பட்ட பலூன்தான். ஸ்டார் வார்ஸ் என்னும் ஹாலிவுட் படத்தில் வரும் வில்லனான டார்த் வேடர் கதாப்பாத்திரத்துக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் உண்டு.

மிகெப்பெரிய சைஸில் க்ளிப்டன் பாலத்துக்கு மேல் பறந்து சென்ற டார்த் வேடரை மக்கள் ஆச்சர்யத்துடன் ரசித்தனர். மேலும் அந்த பலூனோடு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.