வெள்ளை மாளிகையை தாக்க முயற்சித்த இந்தியருக்கு 8 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு..!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்திய இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம், வாடகை டிரக் மூலம் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 வயது சாய் வர்ஷித் என்பவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க அரசை கவிழ்த்து, ஹிட்லரின் நாஜி அதிகாரத்தை நிறுவ வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது என்று விசாரணைகளில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில், சாய்க்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவத்தை சாய் பல வாரங்களுக்கு முன்பே திட்டமிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். விசாரணையின் போது சாய், தன் மீது குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran