திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (11:19 IST)

நாசாவின் புதிய திட்டத்திற்கு தலைவரான இந்தியர்

Shaktriya nasa
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் புதிய திட்டத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பொறியாளர் ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு பல முக்கிய தகவல்களை அறிவித்து வருவது அமெரிக்கா  நாட்டின் நாசா விண்வெளி ஆய்வு மையம்.

ஏற்கனவே  நிலவுக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்துள்ள நிலையில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா ஆய்வு மையம் திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கு தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷாக்ட்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.  இவரது திட்டத்தில்  செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வெற்றிகரமாக கால் பதித்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.