புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 1 ஜூலை 2020 (17:37 IST)

அமெரிக்காவிலும் தலைதூக்கிய இந்தியர் சாதி பிரச்சனை!

இந்தியாவில் இருந்து அமெரிக்க நாட்டிற்குச் சென்று பணியாற்றி வரும் ஊழியர்களில் சில சாதிய ரீதியாகப் பாகுபாடுகாட்டுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சிஸ்கோ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் மீது மேலாளர்கள் ஜாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக  அம்மாகாணத்திலுள்ள சான் ஜோஸில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஊழியராகப் பணியாற்றி வரும் இந்தியாவைச் சேர்ந்த பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை, அங்கு மேலாளராகப் பணியாற்றி வரும் சுந்தர் ஐஅய்ர் என்பவர் மீதும் , ரமணா கொம்பெல்லா என்பவர் மீதும் ஊழியரை சாதி பெயரில் பாகுபாடு காட்டித் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  சிஸ்கோ நிறுவனத்தின் சார்பில் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் கம்பெனி சட்டத்தின்படி அனைவரும் சரிசமம் தான். இருப்பினும் இந்தியாவை சேர்ந்தோர் அமெரிக்காவில்  பணியாற்றும் போதும் சாதிகொள்கையை கடைப்பிடிக்கின்றனர் என்று கூறியுள்ளார்.