இந்தியா விதிக்கும் வரி, இந்தியா மீதே பாயும்: மோடியை சந்திக்கும் முன் டிரம்ப் கருத்து
பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு முன்னதாக, இந்தியா அதிக வரி விதிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்த அதிபர் டிரம்ப்
அமெரிக்க பொருட்கள் மீது மற்ற நாடுகளை விட, இந்தியாவே அதிக வரி விதிக்கிறது என்றும், அமெரிக்கா மீது இந்தியா எவ்வளவு இறக்குமதி வரி விதிக்கிறதோ, அதே அளவு வரியை இந்தியா மீதும் விதிப்போம் என்றும் பிரதமர் மோடியை சந்திக்கும் முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியை சந்திக்கும் முன் இந்தியா விதிக்கும் வரி குறித்து தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்றும் இந்தியா தனது நட்பு நாடு என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தியாவில் வணிகம் செய்ய எலான் மஸ்க் விரும்புகிறார், ஆனால் இந்தியாவில் அதிக வரி விதிக்கப்படுகிறது, அதிக வரிகள் காரணமாக, இந்தியாவில் வணிகம் செய்வது மிக கடினம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பால், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.
Edited by Siva