பூமியின் சுழற்சி வேகம் குறைவு? காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதாக அமெரிக்காவின் கொலரடோ பௌல்டார் பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் ரோஜார் பில்ஹாம் மேற்கொண்ட ஆய்விலும், ரெபேக்கா பென்டிக் பல்கலைக்கழகத்தின் மொன்டானா ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன.
அதாவது பூமியின் சுழற்சி வேகத்தில் மிக மிக குறைந்த அளவில் (ஒரு நாளில் ஒரு மில்லியன் செகண்ட்) மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூமிக்கு கீழேயான ஆற்றல் அதிகாரித்திருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனால் 2018 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுவும் இந்தியாவில் அதிக அளவில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் பூமித் தட்டு சிறிது சிறிதாக ஐரோப்பிய நிலப்பரப்பின் கீழ் இருக்கும் தட்டுகளுக்குக் கீழ் நோக்கி நகர்ந்து வருகிறதாம். இதனால் பூமிக்குக் கீழ் ஏற்படும் அதிகப்படியான ஆற்றல் காரணமாக பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.