செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 13 ஜூலை 2022 (16:34 IST)

உலக மக்கள் தொகையில் முதலிடத்தை நெருங்கும் இந்தியா!

united nation
உலக மக்கள் தொகையில் பல ஆண்டுகளாகவே முதலிடத்தில் வகித்து வருவது  அண்டை நாடான சீனா. இந்த நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கத்தைக்கட்டுப்படுத்த அந்த் நாட்டு அரசு பல  நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதனால் மக்கள் தொகைப் பெருக்கம் ஓரளவு குறைந்தது.

இந்த நிலையில் நீண்ட நாட்களாகவே இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா வரும் 2023 ஆம் ஆண்டு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்த்ல் இருக்கும் என ஐ நா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ நா தெரிவித்துள்ளதாவது:

உலக மக்கள் தொகை தற்போது, 794 கோடியாக உள்ள நிலையில்,  வரும் நவம்பர் மாதம் 15 ஆம் தேதி உலக மக்கல் தொகை எண்ணிக்கை 800 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

 வரு 2030 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 970கோடியை எட்டும், 2080 ஆக் ஆண்டு 1040 கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா வரும் 2023 ஆம் ஆண்டு சீனாவைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்த்ல் இருக்கும் என்றும் இந்தியாவில் தற்போதைய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாகவும், சீனாவில் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாகவும் உள்ளது.

உலகளவில் இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, நைஜீரியா, பிலிப்பன்ஸ், தான்சானியா ஆகிய நாடிகள்  வரும்2050 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகை அதிகரிகப்பில் 50 பங்களிப்பு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.