இந்தியாவால் உலகிற்கே மருந்துகள் வழங்க முடியும் – பில்கேஸ்ட் நம்பிக்கை
உலக அளவில் என்றுமே இந்தியர்களின் அறிவுக்கும், திறமைக்கும் மதிப்புண்டு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபனமாகியுள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் ஒட்டுமொத்த உலகிற்கே இந்தியாவால் மருந்துகள் வழங்க முடியும் என புகழாரம் சூட்டியுள்ளார்.
இஒதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
இந்தக் கொரோனா காலத்தில் தான் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்திய அரசுடன் இணைந்து உத்தரபிரதேசம்,பீகார் ஆகிய மாநிலங்களில் கொரொனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிப்பதாகவும் கூறியுள்ளானர்.
இந்தியர்களில் புகழை உயர்த்தியுள்ள பில்கேட்ஸிற்கு அனைவரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.