செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (12:17 IST)

என் மனைவிக்கு ஏதாவது நடந்தால் சும்மா விட மாட்டேன்: இம்ரான்கான் எச்சரிக்கை..!

என் மனைவிக்கு மட்டும் ஏதாவது நடந்தால் அதற்கு ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் தான் காரணம் என்றும் அவரை நான் சும்மா விடமாட்டேன் என்றும் இம்ரான் கான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகிய இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவரும் தற்போது சிறையில் உள்ளனர்

இந்த நிலையில் இம்ரான் கான் தனது மனைவி புஷ்ரா பீவி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவ தளபதி அசீம் முனீர் தான் காரணம் எனவும், மனைவியை குற்றவாளி என தீர்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதி இருந்திருக்கிறார் அந்த தீர்ப்பில் ஜெனரல் அசை முனீர் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும், என் மனைவிக்கு மட்டும் ஏதாவது நேர்ந்தால் நான் உயிருடன் இருக்கும் வரை அசீம் முனீரை சும்மா விடமாட்டேன் அரசியல் சட்டத்திற்கு விரோதமான அவரது நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே அவர் தனது மனைவி புஷ்ரா பீவிக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய முயற்சி நடந்ததாக குற்றம் காட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டுக்கு இதுவரை ராணுவ தரப்பிலிருந்து எந்த பதிலும் வெளிவரவில்லை.

Edited by Mahendran