புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 அக்டோபர் 2019 (17:34 IST)

ஈரான் – சவுதிக்கு மத்தியஸ்தம் செய்யும் இம்ரான்கான்?! – சவுதி அரசை ஈர்க்க திட்டமா?

ஈரான் – சவுதி அரேபியா இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால், இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய இம்ரான்கான் முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சவுதி எண்ணெய் கப்பல்கள் ஈரான் கிளர்ச்சியாளர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. மேலும் இதனால் நிறைய நஷ்டத்தை சவுதி அரசு சந்தித்து வருவதால் ஈரான் கிளர்ச்சியாளர்களை அடக்க யுத்தம் செய்ய யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு ஏமன் வளைகுடா பகுதியில் சவுதி கப்பல்கள் தாக்கப்பட்டது. தற்போது மீண்டும் சவுதிக்கு சொந்தமான கப்பல் ஈரான் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இரு நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதி அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசு என்பதால் இந்த மத்தியஸ்தம் மூலம் ஏற்கனவே சவுதி மன்னருடன் இருந்த கருத்து முரண்பாடை சரிச்செய்து கொள்ளலாம் என இம்ரான்கான் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்போ சவுதி பிரச்சினையை வைத்து ஈரானுக்கு மேலும் அதிகமான பொருளாதார தடைகளை விதிக்கும் திட்டத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. பெரிய நாட்டாமை இருக்கும்போது உள்ளே இம்ரான்கான் என்ன செய்துவிட முடியும் என உலக அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.