1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (20:41 IST)

ரோடு போடாத மேயரை வண்டியில் கட்டி இழுத்து சென்ற மக்கள்! – பதறவைக்கும் வீடியோ!

தேர்தலில் ரோடு போட்டு தருவதாக வாக்கு கொடுத்து விட்டு அதை செயல்படுத்தாத மேயரை வணியின் பின்னால் கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்றிருக்கின்றனர் மெக்ஸிகோவை சேர்ந்த சிலர்.

மெக்ஸிக்கோ மாகாணத்தின் லாஸ் மர்கரிட்டாஸ் நகரத்தின் மேயராக பதவி வகித்து வருபவர் ஜார்ஜ் லூயி எஸ்கண்டோன் ஹெர்னாண்டஸ். இவரது பெயரை போலவே மர்கரிட்டாஸின் சாலைகளும் மிக நீளமானவை. தேர்தல் வாக்குறுதிகளில் அனைத்து பகுதிகளிலும் சாலைகள் போட்டுத்தருவதே தனது முதல் வேலை என்று அள்ளிவிட்டிருக்கிறார் ஹெர்னாண்டஸ். ஆனால் மேயர் ஆனப்பிறகு ரோடு போடும் வழியை காணோம்!

இதுகுறித்து மக்கள் திரும்ப திரும்ப புகார் அளித்து ஹெர்னாண்டஸ் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதில் கடுப்பான சிலர் சில மாதங்கள் முன்பு மேயர் அலுவலகத்துக்குள் புகுந்து பொருட்களை போட்டு உடைத்திருக்கின்றனர். அதற்கு பிறகாவது ரோடு போட்டிருக்க கூடாதா இந்த மேயர்? அதற்கு பிறகும் அவரிடம் ஒரு ரியாக்‌ஷனும் இல்லை.

இதில் கடுப்பான மக்கள் மேயர் அலுவலகத்துக்குள் புகுந்து ஹெர்னாண்டஸை பிடித்து வந்து ஒரு ட்ரக்கின் பின்னால் கட்டியுள்ளனர். பிறகு மர்கரிட்டாஸின் சிதிலமடைந்த சாலைகளில் அவரை கட்டி இழுத்து கொண்டு ஒரு ட்ரிப் அடித்திருக்கிறார்கள். இதில் மேயருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் வன்முறையில் ஈடுபட்ட இருவரை மெக்ஸிகோ போலீஸ் கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளையும் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.