வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 9 அக்டோபர் 2018 (17:07 IST)

இம்ரான் கானை கர்நாடக குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்

இம்ரான் கானை பாகிஸ்தான் நாட்டு தலிஅவர் ஒருவர் குரங்குடன் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது ஒரு விவாத பொருளாக மாரியுள்ளது. 
 
கர்நாடக மாநிலத்தில் குரங்கு ஒன்று பேருந்தை ஓட்டிய வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. இதன் காரணமாக பேருந்து ஓட்டுநர் பிரகாஷ் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்படார். 
 
இந்த வீடியோவை குறிப்பிட்டு, பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பின்வருமாறு பேசியுள்ளார். அது பின்வருமாறு, நான் சமீபத்தில் வீடியோ ஒன்றைப் பார்த்தேன். அதில் குரங்கு ஒன்று பேருந்தை இயக்குவது போல் இருக்கும். அந்த குரங்கும் அந்தப் பேருந்தை அதுதான் இயக்குகிறது என்று நினைத்துக்கொள்ளும். ஆனால் உண்மை என்னவென்றால் அந்தப் பேருந்தை ஓட்டுநர்தான் இயக்குகிறார். 
 
அதேபோல்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என்று குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பேருந்தை ஓட்டும் குரங்கை இம்ரான் கான் எனவும், அதன் ஓட்டுநரை பாகிஸ்தான் ராணுவம் என்று அவர் விமர்சித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.