வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2019 (18:31 IST)

பாகிஸ்தானில் சடலமாக மீட்கப்பட்ட இந்து மாணவி: கொலையா? தற்கொலையா??

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி செய்து தன் அறையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் பிபி அசிஃபா  என்ற பல் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தவர் நம்ரிதா சந்தனி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் தனது அறையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் நம்ரிதா தனது துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

ஆனால் நம்ரிதாவின் உறவினர்களோ, நம்ரிதா மைனாரிட்டி என்பதால்  கொலை செய்ய்ப்பட்டிருக்கிறார் என தெரிவித்து வருகின்றனர். மேலும், ”கல்லூரி நிர்வாகம் துப்பட்டாவால் நம்ரிதா தூக்கு போட்டு இறந்ததாக கூறுகிறது, ஆனால் அவர் கழுத்தில் வயரால் இருக்கப்பட்டது போன்ற தடயம் உள்ளதாக நம்ரிதாவின் சகோதரர” கூறுகிறார். எனினும் நம்ரிதாவின் தற்கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.