1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (18:23 IST)

இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்.

பாகிஸ்தான் நாட்டில், ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானை நீதிமன்ற வளாகத்தில் வைத்து ரேஞ்சர் படையினர் கைது செய்தனர்.

இந்தச்  சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது கட்சியினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டது.

கடந்த மே 9 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இம்ரான் கானை சிறப்பு படையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து,   ஐகோர்டில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக  இம்ரான் கான் தரப்பில் சுப்ரிம் கோர்டில் வழக்கு தொடரப்பட்டது.    

இந்த வழக்கில், ‘இம்ரான் கைது சட்டவிரோதம் என்று கூறி இன்னும் ஒரு மணி நேரத்தில்  அவரை ஆஜர் படுத்த வேண்டும் ‘என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து,  ‘இம்ரான்கான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவரை போலீஸ் லைன் விருந்தினர் மாளிகையில் வைக்கப்படுவார். அவர் கைதியாக கருதப்படமாட்டார். அவரது பாதுகாப்பை போலீஸார் உறுதிசெய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இவ்வழக்கு இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இம்ரான் கானுக்கு  2 வாரம் ஜாமீன் வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.