1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (09:48 IST)

கொய்யாப்பழம் கிலோ ரூ.6க்கு விற்பனை: விவசாயிகள் கவலை!

Guava
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கொய்யாப்பழம் 80 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ரூ 6 முதல் 20 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கொய்யாப்பழம் உளைச்சல் மிக அதிகமாக உள்ளதை அடுத்து சந்தைக்கு வரும் கொய்யாப்பழங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிகிறது 
 
இதனால் கடந்த சில நாட்களாக விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்தவாரம் ரூபாய் 80 வரை ஒரு கிலோ கொய்யாப்பழம் விற்பனையான நிலையில் தற்போது கொய்யாப்பழத்தின் விலை அதிகமாக இருப்பதால் ரூபாய் 6 முதல் 20 வரை மட்டுமே விற்பனையாகி வருவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்து வருகின்றனர்
 
கொய்யா விலை வீழ்ச்சி அடைந்து இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சந்தோசம் அடைந்திருந்தாலும் விவசாயிகள் லாரி கூலி கூட வரவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்