வரி உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை உயர்வா?
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி வரி விதித்துள்ளது. அதுமட்டுமின்றி கச்சா எண்ணெய் உற்பத்திக்கும் லாப வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்று பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 40 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலைகள் உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
இதனை அடுத்து ஊரில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63 எனவும் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.24 என ஒரு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உயர்ந்தபோதிலும் ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை 30 சதவீதம் சலுகை விலையில் பெற்றதால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது