1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 மே 2018 (15:20 IST)

ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி ரத்து: அதிகாரப்பூர்வ தகவல்!

மலேசிய அரசு ஜூன் 1 ஆம் தேதி முதல் சேவை மற்றும் சரக்கு வரியை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு பதில் முன்னர் வழக்கத்தி இருந்த பழைய வரி முறை கொண்டுவரப்படவுள்ளதாம். 
 
மலேசியாவில் சமீபத்தில் பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தல் முடிந்து மகாதீர் முகமது பிரதமரானார். தேர்தலில் வெற்றி பெற்றால் ஜிஎஸ்டியை ரத்து செய்வதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அதன் படி பதவியேற்ற பின்னர் ஜிஎஸ்டியை ரத்து செய்து உள்ளார்.
 
மலேசியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி மலேசிய மக்களிடையே அதிருப்தியையும், வேலை இழப்புகளையும் உருவாக்கியது. மலேசியாவின் வருமானத்தில், வருமான வரிக்கு (32%) பிறகு சரக்கு மற்றும் சேவை வரியின் பங்கு அதிகமாக (18%) இருக்கிறது என்பது குறிப்பிடத்தது. 
 
கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் பெறும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் இந்த வருமான இழப்பை எளிதில் ஈடு செய்ய முடியும் எனவும் தெரிகிறது. மேலும், இனி அனைத்து பதிவு பெற்ற வணிகர்களும் இப்போது பூஜ்ஜிய விகிதத்தின் முடிவை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.