திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 26 ஏப்ரல் 2018 (20:27 IST)

ஏர்செல் சிவசங்கரன் ரூ.600 கோடி வங்கி மோசடியா? அதிர்ச்சி தகவல்

பெரிய பெரிய தொழிலதிபர்கள் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் உள்ள சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்பட பல தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை வங்கிகளில் கடனாக பெற்றுவிட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர்
 
இந்த நிலையில் ஏர்செல் முன்னாள் நிறுவனர் சிவசங்கரன் ஐ.டி.பி.ஐ. வங்கியில் ரூ.600 கோடி வரை பண மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் முடிவில்தான் இவர் பண மோசடி செய்தாரா? என்பது தெரியவரும்
 
ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் ஆரம்பித்தாலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே போட்டியை சமாளிக்க முடியாமல் மலேசியாவைச் சோ்ந்த நிறுவனமான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.