செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (14:05 IST)

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் Google மற்றும் X நிறுவனங்கள்

elan musk -sundar pichai
கூகுள் மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சமீப காலமாக உலகம் முழுவதும் உள்ள முன்னணி ஐடி நிறுவனங்கள், சமூக வலைதள நிறுவனங்கள், இணையதள தேடு பொறி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்து வந்தன.

இதற்கு, உலகளவில் பொருளாதார மந்தநிலை நிறுவனத்தின்  செலவை குறைப்பது உள்ளிட்ட  காரணங்கள் கூறப்பட்டது.

இந்த நிலையில்,  கூகுள்  நிறுவனம், தங்கள் நிறுவன செலவுகளை குறைப்பதற்காக 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதேபோல், எலான் மஸ்கின் டுவிட்டர் எனும் எக்ஸ்  நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பு பிரிவில்  இருந்து 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாகக கூறப்படுகிறது.

கூகுளின் தாய் நிறுவனமான Alphabet கடந்தாண்டு ஜனவரில் தங்கள் நிறுவனத்தில் இருந்து 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.