செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (19:41 IST)

ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்சம் ரூபாய்: எந்த நாட்டில் தெரியுமா?

உலக வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு சவரன் தங்கம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பதும் அதுவும் இந்தியாவின் அண்டை நாட்டில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது 
 
ஒரு சவரன் தங்கம் இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.1.50 லட்சம் என  விற்பனை ஆவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால் பெட்ரோல் டீசல் விலையை சமீபத்தில் இலங்கையில் உச்சம் அடைந்த நிலையில் தற்போது தங்கம் விலை உச்சத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது