உலகம் முழுவதும் முடங்கியது ஜிமெயில்: என்ன காரணம்?
இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஜிமெயில் திடீரென முடங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
உலகிலேயே அதிக நபர்கள் பயன்படுத்தும் ஜிமெயிலில் அக்கவுண்ட் இல்லாதவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு ஏராளமானமானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் திடீரென ஜிமெயில் முடங்கியது. பலருக்கு மெயில் கிடைப்பதிலும் சிலருக்கு மெயில் அனுப்புவதும் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பாக ஐரோப்பாவில் ஒரு சில நாடுகள், அமெரிக்கா, இந்தியா, ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து உள்பட மொத்தம் 42 நாடுகளில் ஜிமெயில் முடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
ஜிமெயில் பயனாளர்கள் சமூகவலைதளத்தில் இதுகுறித்து கருத்துக்களை பகிர்ந்ததை அடுத்து ஜிமெயில் குறித்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஜிமெயில் நிறுவனம் விளக்கம் அளித்தபோது ’தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், இதனை விசாரித்து வருகிறோம் என்றும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். சர்வீஸ் இன்டரெப்சன் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூகுள் தெரிவித்துள்ளது
ஜிமெயில் மட்டுமின்றி கூகுள் ட்ரைவ், யூடியூப் உள்ளிட்டவைகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிலர் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் ட்ரைவில் ஆவணங்களை இணைக்க முடியவில்லை என்றும் யூட்யூபில் வீடியோவை அப்லோட் செய்ய முடியவில்லை என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் ஒரு சிலர் தங்களுக்கு ஜிமெயிலில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எப்பொழுதும் போல் வேலை செய்வதாகவும் பதிவு செய்து வருகின்றனர்.