ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (09:57 IST)

24 மணி நேரத்தில் 64,531 புதிய பாதிப்புகள் – இந்திய நிலவரம்!

இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் 64 ஆயிரத்திற்கு அதிமாக உள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 27 லட்சத்தை தாண்டியுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 64,531 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 லிருந்து 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 19.77 லட்சத்தில் இருந்து 20.37 லட்சமாக உயர்வு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 51,797 லிருந்து 52,889 ஆக அதிகரித்துள்ளது. 
 
அதேபோல கடந்த சில நாட்களில் பலி எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.