ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 12 அக்டோபர் 2018 (15:59 IST)

உலகம் முழுவதும் 48 மணிநேரம் இண்டர்நெட் சேவை முடக்கம்?

உலகம் முழுவதும் அடுத்த 48 மணிநேரத்திற்கு இணையதள சேவை செயல்படாமல் போக வாய்ப்புள்ளதாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இணையதளம் இல்லாமல் நம்மால் எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். வீட்டின் மின்சார கட்டணத்தில் இருந்து வெளிநாட்டு விமான டிக்கெட் வரை அனைத்துமே இண்டர்நெட்டின் உதவியுடன் நம் கண்சிமிட்டும் நேரத்தில் நம் கைக்குள் இருக்கும் செல்ஃபோனிலேயே செய்து கொள்ளலாம்.

அத்தகைய இண்டர்நெட் இல்லாமல் நம்மால ஒருமணிநேரம் இருக்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தனிநபராலேயே இருக்க முடியாது என்றால் ஒட்டுமொத்த உலகமும் இண்டர்நெட் இல்லாமல் 2 நாட்கள் இருந்தால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

ஆம் அத்தகைய இணையதள முடுக்கம் அடுத்த 48 மணிநேரங்களுக்கு வரலாம் என ரஷ்யா டுடே என்ற செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. தெ இண்டர்நெட் கார்ப்பரேஷன் ஆஃப் அசைண்டு நேம்ஸ் அண்டு நம்பர்ஸ் (The Internet Corporation of Assigned Names and Numbers) தனது பரமரிப்புப் பணிகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்கொள்ள இருக்கிறது. பராமரிப்புப் பணியின் போது தனது ரகசிய சங்கேத குறிகளை மாற்ற இருப்பதால் இணையதள பயன்பாட்டிற்கு இடையூறாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இணையதள முடக்கம், அல்லது சில வலைதளங்களுக்கு செல்வதில் சிக்கல், இணையப் பரிமாற்றம் போன்ற சில சிக்கல்கள் அடுத்த 48 மணிநேரத்திற்கு எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.