வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 அக்டோபர் 2018 (11:56 IST)

பீட்சாவில் எச்சை துப்பி டெலிவரி செய்த டெலிவரி பாய்!!

துருக்கியில் வாடிக்கையாளருக்கு கொடுக்கபோன பீட்சாவில் டெல்வரி பாய் எச்சை துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய ஃபாஸ்ட் உலகத்தில் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை விரும்பி சாப்பிடும் உணவு பீட்சா தான். கையில் ஒரு போன் இருந்தால் போதும், இருக்கும் இடத்திற்கே பீட்சா வந்து சேரும். அப்படி துருக்கியில் ஹுசையின் என்ற நபர் பீட்சாவை ஆர்டர் செய்தார்.
பீட்சா டெலிவரி செய்ய வந்த புரக் என்ற நபர், ஹுசையினுக்கு கொடுக்கவிருந்த பீட்சாவில் எச்சை துப்பி அவருக்கு தந்ததாக தெரிகிறது. இதனை ஹுசையின் தன் வீட்டின் வெளியே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது நடைபெற்று சில மாதங்கள் ஆகிய நிலையில் இது தொடர்பான வழக்கை போலீஸார் விசாரித்து வந்தனர்.
 
இதனை பீட்சா டெலிவரி பாய் புரக் மறுத்துள்ளார். எனினும் இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் புரகக்கிற்கு 18 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என தெரிகிறது.
 
இந்த செய்தியை கேட்ட பின் பலருக்கு இனி பீட்சாவை ஆர்டர் செய்து சாப்பிடும் ஆசையே போய்விட்டது.