உலக அளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உயர்வு....சிங்கப்பூரில் ஊரடங்கு உத்தரவு...
சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா தொற்று பல உலக நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோயினால் இதுவரை ஐரோப்பாவில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கல் பலியாகியுள்ளனர். 5 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 950 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,10,000 –ஐ தாண்டிவிட்டது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு இற்ந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கொரோனா பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் ஏப்.7 ஆம் தேதி முதல் ஒரு மாதத்துக்கு ஊரடங்கு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது அத்தியாவசிய தேவைகள், பொருளாதார துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் தெரிவித்துள்ளார்.