புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 31 அக்டோபர் 2017 (18:44 IST)

லெஸி-யை வைத்து குடும்பத்தையே காலி செய்த பாகிஸ்தான் பெண்!!

பாகிஸ்தானில் பெண் ஒருவர் தனக்கு கட்டாய திருமணம் செய்ததால் கணவரை கொல்லை நினைத்து குடும்பத்தையே கொன்றுவிட்டார்.


 
 
ஆசியா பிபி என்ற பெண்ணிற்கு அவளது பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்தனர். ஆனால், அவர் வேறு ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 
 
இதனால், கணவரை கொலை நினைத்த அவர், கணவருக்கு கொடுக்க இருந்த பாலில் விஷம் கலந்தார். ஆனால் அதை அவரது கணவர் குடிக்கவில்லை. 
 
தவறுதலாக அந்த பாலை லெஸியில் கலந்து விட்டனர். விஷம் கலந்த லெசியை குடும்பத்தில் உள்ள அனைவரும் பருகினர். 
 
லெஸியை பருகியதால் கணவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.