1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (20:31 IST)

மனிதர்களை கொல்லும் விஷமுடைய ஜெல்லி மீன்கள்: கொடைக்கானலில் பரபரப்பு!!

ஆழமான கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்கள் காணப்படுவது சதாரனமானவை. ஆனால், சமீபத்தில் கொடைக்கானலில் நன்னீரில் வாழும் ஜெல்லி மின்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 


 
 
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெல்லி மீன்கள் வகைகள் உள்ளன. ஜெல்லி மீன்களின் வி‌ஷம் மனிதனை தாக்கினால் சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, வாந்தி, பின் முதுகில் வலி, மார்பு வலி போன்றவற்றை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். 
 
30 வினாடிகளில் மனிதனை கொல்லும் ஆற்றல் கொண்ட ஜெல்லி மீன்களும் உலகில் உள்ளன. இந்நிலையில், கொடைக்கானல் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட ஜெல்லி மீன்களால் தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
ஏனெனில் கொடைக்கானல் ஏரியில் இருந்து வெளியேறும் நீரோடைப் பகுதியான கல்லறை மேடு பகுதியில் வசிக்கின்ற மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். இது, ஜெல்லி மீன்களின் பாதிப்பால் இருக்கும் என்று மக்கள் பீதியில் உள்ளனர்.