ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 29 ஜனவரி 2018 (23:43 IST)

பெண்களை பார்த்து விசில் அடித்தால் ரூ.27 ஆயிரம் அபராதம்:

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளம்பெண்களிடம் விரும்பத்தகாத வகையில் காதலை புரபோஸ் செய்வதாக புகார்கள் குவிந்து கொண்டிருப்பதால் இதற்கு முடிவு கட்ட பிரான்ஸ் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்ற முடிவு செய்துள்ளது.

இதன்படி பெண்களை பார்த்து விசில் அடித்தாலோ, அவர்களிடம் போன் நம்பர் கேட்டாலோ, அல்லது விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டாலோ  €350 அபாரதம் விதிக்க சட்டம் இயற்ற முடிவு செய்துள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் ரூ.27 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த புதிய சட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள 100% பெண்கள் ஆதரவு கொடுத்துள்ளதால் விரைவில் இந்த சட்டம் இயற்றப்படும் என தெரிகிறது. எனவே பிரான்ஸ் இளைஞர்கள் இனிமேல் கவனமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது