செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 செப்டம்பர் 2021 (08:33 IST)

ஐ.எஸ் அமைப்பை அடித்து நொறுக்கிய பிரான்ஸ்! – முக்கிய தலைவர் கொல்லப்பட்டாரா?

ஆப்பிரிக்காவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது பிரான்ஸ் நடத்திய தாக்குதலில் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவின் மாலி, பர்கினோ, பாசோ, நைஜர் ஆகிய நாடுகளில் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கும் நடவடிக்கையில் இந்த நாடுகளில் அடிக்கடி பிரான்ஸ் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மாலியில் பிரான்ஸ் நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவரான அதான் அபு வாலிட் அல் ஷராவி கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் மானுவேல் மெக்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.