Daily Horoscope
✕

வாரத்தில் 4 நாள் வேலை முறை அறிமுகம்! எந்த நாட்டில் தெரியுமா?

Written By siva
Updated: செவ்வாய், 7 ஜூன் 2022 (12:29 IST)
வாரத்தில் நான்கு நாட்கள் வேலை நாள் மற்றும் 3 நாட்கள் விடுமுறை நாள் என ஒரு சில நாடுகள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது பிரிட்டனில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பிரிட்டன் முழுவதும் 70 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 3,000 ஊழியர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை அடிப்படையில் பணி புரியும்  முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பிரிட்டனில் மனிதனின் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய முயற்சி செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா உள்பட மேலும் சில நாடுகளில் இந்த நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments