1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (14:45 IST)

சீனாவில் கடும் வெள்ளம்: சுமார் 20 லட்சம் பேர் பாதிப்பு

சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
 
கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தம் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது. கனமழையால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஹெனான் மாகாணத்தில் தீவிர மழை பெய்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஒரு துயரத்தை சீனா சந்தித்திருக்கிறது. ஷாங்க்சி மாகாணம் முழுவதும் 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
நிலச்சரிவின் காரணமாக நான்கு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துவிட்டதாக அரசின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் இதழ் கூறுகிறது.