புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (12:54 IST)

உயிரியல் பூங்காவில் தீ; கருகி உயிரிழந்த குரங்குகள்

ஜெர்மனியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன.

ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட்பாலியா மாகாணத்தில் அமைந்துள்ளது கிரெஃபெல்டு உயிரியல் பூங்கா. இந்த பூங்கா மிகவும் பழமையான பூங்கா என அறியப்படுகிறது.

இதில் சிம்பான்சி, ஓராங்கட்டான் கொரில்லா போன்ற குரங்குகளுக்கு பிரத்யேக சரணாலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தன்று நடைபெற்ற கொண்டாட்டத்தில் திடீரென  பூங்காவில் தீ பிடித்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். எனினும் அதற்குள் தீ பூங்கா முழுவதும் பரவியது.

இந்த விபத்தில் சரணாலயத்தில் இருந்த 32 குரங்குகளில் 30 குரங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. உயிரியல் பூங்காவில் எவ்வாறு தீ பிடித்தது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.