செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 1 ஜனவரி 2020 (10:38 IST)

அணு ஆயுத சோதனையை தொடரப்போகும் வட கொரியா!!

அணு ஆயுத சோதனையை தொடரப்போவதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட வேண்டாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் கோரிக்கை வைத்தார்.
அக்கோரிக்கையை ஏற்ற கிம், அணு ஆயுத சோதனையில் ஈடுபடாது என அறிவித்தது.

எனினும் நாட்டின் மீதான சர்வதேச தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என கிம் வலியுறுத்தி வந்தார். ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக ஒப்படைத்தால் தான் அதனை பற்றி பரீசிலிக்க முடியும் என அமெரிக்க கூறியது. இந்நிலையில் கிம், ”வட கொரியா தயாரிக்கவுள்ள அணு ஆயுதங்களை இந்த உலகம் இனி காணும்” என கூறியுள்ளார். இதனால் உலக நாடுகள் பதற்றம் நிலவி வருகிறது.