திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 23 மார்ச் 2023 (22:56 IST)

நிதி மோசடி வழக்கு: முன்னாள் பிரதமரின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான்  ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு, கடுமையான விமர்சனங்கள் கூறி வரும் நிலையில், அவருக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையிலுள்ளன.

இந்த நிலையில், நீதிபதி, ஐபிஎஸ் அதிகாரிகளை அவதூறாக பேசிய புகாரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் உள்ளது. சமீபத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை கைது செய்ய போலீஸார் முயன்றனர்.

இதையடுத்து, அவர் மீதான பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.  இந்த  நிலையில், கடந்தாண்டு அக்டோபர் மாதம், இம்ரான் கான் மீது தடைசெய்யப்பட்ட நிதியுதவி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து, பாகிஸ்தான் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலைய்ல், இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், தடைசெய்யப்பட்ட நிதியுதவி செய்த வழக்கில், இம்ரான் கானின் ஜாமீன் ரத்து செய்யக்கோரி அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இம்ரான்கானின் ஜாமீன் மனுவை ரத்து செய்ய மறுத்துவிட்டது.