வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (20:08 IST)

19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்த Accenture

Accenture
அக்சேன்சர் நிறுவனம் வியாழக்கிழமை தங்கள் நிறுவனத்தில் இருந்து 19,000 பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவிடத்துள்ளது.

கடந்தாண்டு, உலகம் முழுவதும் உள்ள ஐடி கம்பெனிகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை அவர்களின் நிறுவனம் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்தது.

குறிப்பாக ஃபேஸ்புக், அமேசான், டுவிட்டர், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி வந்த ஊழியர்களை  பணி நீக்கம் செய்தது, அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் பல முன்னணி நிறுவங்களில் ஆட்குறைப்பு பணி நடக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்சென்சர் நிறுவனம் தங்கள் நிறுவனம்  தனது உலகளாவிய வர்த்தகத்தில் இருந்து சுமார் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பொருளாதார மந்தநிலை, நிறுவன செலவு குறைப்புகள் ஆகியவற்றிற்காக  இந்த முடிவை தலைமை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.