இன்ஸ்டாகிராமிலும் லொகேஷனை ஷேர் செய்யும் வசதி
இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் லொகேஷனை ஷேர் செய்யும் வசதி அறிமுகப்படவுள்ளது
இன்றைய காலத்தில் தகவல்தொடர்பை எளிமையாக்க சமூக வலைதளங்களும், 5ஜி நெட்வொர்க்களும், ஸ்மார்ட் போன்களும் உள்ளன.
இந்த் நிலையில், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்போது வழிதெரியாமல் இருந்தால், அதற்கு கைவசமாக கூகுள் மேப் உடன் இருந்தால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லலாம். சில நேரங்களில் இந்த கூகுள் மேப் சொதப்பிவிடுவதாக பயனர்கள் புகார் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், கூகுள் மேப்பை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது போல இனிமேல் இன்ஸ்டாகிராமிலும் லொகேஷனை ஷேர் செய்யும் வசதி அறிமுகம் செய்யவுள்ளது அந்த நிறுவனம்.
அதன்படி, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், ஸ்டோரீஸ்.லைவ் ஆகியவை பயன்பாட்டில் உள்ள் நிலையில், இன்ஸ்டாகிராமில் பயனரின் லொகேசனை ஷேர் செய்யும் வகையில், Friend Map என்ற புதிய அம்சத்தை அந்த நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் மற்ற அம்சங்களைப் போலவே இதற்காகன Privacy Settingsம் உள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.