புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (09:14 IST)

மறுபடியும் கோளாறு செய்த பேஸ்புக் செயலிகள்! – மன்னிப்பு கேட்ட மார்க் ஸுகெர்பெர்க்!

பேஸ்புக் நிறுவன செயலிகள் நேற்று திடீரென சில நாடுகளில் கோளாறான சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பலகோடி மக்களாள் பேஸ்புக் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தின் மற்ற செயலிகளான இன்ஸ்டாகிராம், வாட்ஸப் உள்ளிட்டைவையும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 6 மணி நேரத்திற்கு பேஸ்புக் செயலிகள் அனைத்தும் முடங்கியதால் மக்கள் ஸ்தம்பித்தனர்.

இந்த விவகாரத்திற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியிருந்தது. இந்நிலையில் நேற்று சில நாடுகளில் மீண்டும் பேஸ்புக் செயலிகள் சில மணி நேரங்கள் முடங்கியுள்ளது. இதற்கு மீண்டும் மன்னிப்பு கோரியுள்ள பேஸ்புக் விரைவில் பிரச்சினைகளை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளது.