வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (18:03 IST)

ரஷ்யாவில் கடைசி ஒளிபரப்பை முடித்துக்கொண்டு வெளியேறிய டிவி ஊழியர்கள்

ரஷ்ய ஆயுதப்படை குறித்து போல செய்திகளை பரப்புவோரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

 
இந்நிலையில், ரஷ்ய படையெடுப்பு குறித்து ஒளிபரப்பியதால் அழுத்தத்திற்கு உள்ளானரஷ்யாவின் கடைசி சுயாதீன தொலைக்காட்சி ஊடகமான ‘டிவி ரெயின்’ (TV Rain),நேற்று, வியாழக்கிழமை, அதன் ஒளிபரப்பை காலவரையறையின்றி நிறுத்தியது.
 
டோஜ்ட் (Dozhd) எனவும் அழைக்கப்படும் இந்த சேனலின் ஊழியர்கள், அரங்கிலிருந்து வெளியேறுவதை காட்டி, அதன் இறுதி ஒளிபரப்பை முடித்தது. ரஷ்யாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பு, அந்த சேனல் “தீவிரவாதத்தைத் தூண்டுகிறது. ரஷ்ய குடிமக்களை துன்புறுத்துகிறது, பொது அமைதி மற்றும் பாதுகாப்பை பெருமளவில் குலைக்கிறது மற்றும் போராட்டங்களை ஊக்குவிக்கிறது” என தெரிவித்துள்ளது.