1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஜூலை 2018 (16:34 IST)

பில்லி சூனியம் வைத்து பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய நர்ஸ்....

பில்லி சூனியம்  செய்து இளம்பெண்களை மயக்கி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நர்ஸுக்கு 14 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 
லண்டனை சேர்ந்த ஜோசப்பின் இயாமு(53) என்ற நர்ஸுக்கு பில்லி சூனியமத்தில் அதிக ஆர்வம் இருந்தது. இந்நிலையில், நைஜீரியாவை சேர்ந்த 5 இளம் பெண்களை தனது வலையில் வீழ்த்தி மாந்திரீக சடங்கில் ஈடுபட வைத்துள்ளார். அப்போது, பூஜைகள் செய்து கோழியின் இதயத்தை சாப்பிட வைப்பது, புழுக்களுடன் கூடிய இரத்தத்தை குடிக்கச் செய்வது, பிளேடால் தங்கள் உடல்களில் கூறுவது போன சடங்குகளை செய்ய வைத்துள்ளார். அதன் பின், அவர்களை ஜெர்மன் நாட்டுக்கு பாலியல் தொழில் செய்ய அனுப்பியுள்ளார்.
 
மேலும், அந்த தொழில் செய்யும் போது தப்பி ஓடிவிடக்கூடாது, தன்னை பற்றி போலீசாருடம் எதுவும் கூறக்கூடாது என  மிரட்டி வாக்குறுதி வாங்கியுள்ளார்.

 
தற்போது இந்த விவகாரங்கள் வெளிச்சத்துகு வர போலீசாரிடம் அவர் சிக்கியுள்ளார். விசாரணையின் முடிவில் இயாமுவுக்கு 14 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.