செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 1 நவம்பர் 2022 (14:58 IST)

புளூடிக் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர்: எலான் மஸ்க் அதிரடி பதில்!

Elon Musk
டுவிட்டரில் புளூடிக் வைத்திருப்பவர்களுக்கு கட்டணன் வசூலுக்கு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் எழுத்தாளர் ஒருவர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எழுத்தாளரின் கண்டனத்திற்கு டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அதிரடி பதில் கொடுத்துள்ளார். 
 
பிரபல சமூக வலைதளம் டுவிட்டர் நிறுவனத்தை உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பது ஏற்கனவே தெரிந்ததே
 
இந்த நிலையில் புளூடிக் வைத்திருக்கும் டிவிட்டர் பயனாளிகள் மாதம் 20 டாலர் செலுத்த வேண்டும் என்று கட்டணம் நிர்ணயிக்க போவதாக தகவல் வெளியானது 
 
இந்த தகவல் புளூடிக் வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரபல எழுத்தாளர் ஸ்டீபன் கிங் என்பவர் புளூடிக்  வைத்துக்கொள்ள மாதம் 20 டாலர் வரை செலுத்த வேண்டும் என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என தனது அதிருப்தியை தெரிவித்தார்
 
இதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்கி டுவிட்டர் நிறுவனத்தை நடத்துவதற்கு விளம்பரங்களை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்றும் 20 டாலர் இல்லாவிட்டாலும் 8 டாலர் செலுத்த தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். எனவே டுவிட்டர் நிறுவனத்தின் புளூடிக் வைத்துக்கொள்ள 8 டாலர் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது
 
Edited by Mahendran