வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (15:42 IST)

தாய்லாந்து சிறுவர்களை மீட்க 8 மணி நேரத்தில் தயாரான சிறியவகை நீர்மூழ்கி கப்பல்!

தாய்லாந்தில் உள்ள குகை பகுதியில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி 12 சிறுவர்கள் தங்களது கால்பந்து பயிற்சியாளருடன் சென்றுள்ளனர். அப்போது, அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அவர்கள் அங்கு சிக்கிக்கொண்டர். 
 
12 சிறுவர்களையும் பயிற்சியாளரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கையும் துவஙகப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்ரை வெறும் எட்டு மணி நேரத்தில் உருவாக்கியுள்ளது.  

 
சிறுவர்களை மீட்க 4 கிமி குறுகிய பாதையில் பயணிக்க வேண்டும். அந்த குறுகலான பாதையில் ஆக்சிஜன் குறைவாக உள்ள காரணத்தால், அங்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை பொருத்தும் வேலை நடைபெற்று வருகிறது. இது சவலாக உள்ளதாக கூறப்படுகிறது. 
 
எனவே, குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் சிலிண்டர்களை சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார்கள். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளதாம். 
 
இது தானாகவும் இயங்கும், வெளியில் இருந்தும் இயங்க வைக்கலாம். மீதமுள்ள சிறுவர்களை மீட்க இதை அந்த குறுகலான, குகையின் பாதைக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.