வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 6 ஜூலை 2019 (16:31 IST)

’என்னையவே ஃபோட்டோ பிடிக்கிறியா?’ என்று தும்பிக்கையால் ஒரு பெண்ணை ஓங்கி அடித்த யானை: வைரலாகும் வீடியோ

மிருகக்காட்சி சாலையில் யானையை செல்ஃபோனால் புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணை, யானை தன் தும்பிக்கையால் ஓங்கி அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிருகக்காட்சி சாலை ஒன்றில் சுற்றுலா பயணிகள் பலர் மிருகங்களை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த ஒரு யானையை, ஒரு பெண், தனது செல்ஃபோனில் படம்பிடிக்க முயன்றார்.அப்போது அந்த யானைக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. உடனே தனது .தும்பிக்கையால் அந்த பெண்ணை ஓங்கி அடித்தது.

தும்பிக்கையால் ஓங்கி அடித்ததில் அந்த பெண் கீழே விழ, செல்ஃபோனும் பறந்து விழுந்தது.

இந்த சம்பவத்தை ஒருவர் விடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.