புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 செப்டம்பர் 2021 (07:20 IST)

நாடு முழுவதும் பொருளாதார அவசர நிலை: அதிபர் உத்தரவு

நாடு முழுவதும் பொருளாதார அவசர நிலை: அதிபர் உத்தரவு
இலங்கையில் நாடு முழுவதும் பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் அதிபர் கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டு இருப்பதாக அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
அந்நியச் செலவாணி பற்றாக்குறையால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டு சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.இதனை அடுத்து இலங்கையில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஏற்படுத்தியுள்ளார் இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இலங்கையில் கடந்த சில நாட்களாக அரசியல் சூழ்நிலையில் பரபரப்பாக இருக்கும் நிலையில் திடீரென இந்த பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
இலங்கையில் விலைவாசி விண்ணை போல் ஏறி கொண்டிருப்பதை அடுத்தே இந்த பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது