செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (08:44 IST)

இலங்கையில் உணவு பஞ்சம்: அவசரநிலை பிரகடனம்!!

இலங்கையின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
 
இலங்கையின் பொருளாதார நிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு சர்க்கரை, அரிசி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் அவசரகால விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், தனியார் வங்கிகளில் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்ததால் உணவுப்பொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டு அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 
 
முன்னதாக வடகொரியாவில் சூறாவளி, கொரோனா போன்ற காரணங்களால் உணவு பஞ்சம் ஏற்பட்டது. வட கொரியாவில் மக்கள் 2 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உணவு உண்பதாகவும், ஒரு வாழைப்பழம் ரூ.500 வரை விற்பனையாவதாகவும் செய்திகள் வெளியாகியன.