வங்கதேசம், மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இன்று காலை திடீரென வங்கதேச நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 என பதிவு செய்யப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மியான்மர் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய இரண்டு நாடுகளில் ஒரே நேரத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.