1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 20 நவம்பர் 2021 (08:14 IST)

ராஜஸ்தான் மாநிலத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான் மாநிலத்தில் சற்றுமுன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இந்தியாவில் ஆங்காங்கே சில பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று காலை திடீரென ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலோர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் நடக்கும் 6.6 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே நின்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.