ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:25 IST)

2022 ஆம் ஆண்டின் Earth Hour எப்போது??

2022 ஆம் ஆண்டின் Earth Hour வருகிற 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது என உலக வன உயிர்கள் நிதி அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
புவி மணி (Earth Hour) என்பது வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், தேவை இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும். இது உலகளாவிய இயற்கை நிதியம் நிறுவிய ஆண்டுதோறும் மார்ச்சில் கடைபிடிக்கப்படும். 
 
இந்த நிகழ்ச்சி ஒருமணி நேரத்துக்கு தேவையற்ற விளக்குகளை இரவு 8:30 மணியில் இருந்து இரவு 9:30 மணி வரையில் புவிக்கோளுக்காக அணைத்துவைக்குமாறு வேண்டும் நாளாகும். இது ஆத்திரேலியாவில் சிட்னி நகரில் விளக்கணைப்பு நாளாக 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த ஆண்டின் Earth Hour வருகிற 26 ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் என உலக வன உயிர் நிதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.