வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 பிப்ரவரி 2021 (10:30 IST)

எவ்ளோ நேக்கா என்னையும் கோத்து விட்டுட்ட..! – காதலன் பரிசால் சிறையில் காதலி!

துபாயில் காதலர் ஒருவர் காதலர் தினத்தில் தனது காதலிக்காக ஒட்டக்குட்டியை திருடியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் துபாயை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு காதலர் தினத்திற்கு பரிசளிக்க விரும்பியுள்ளார். இதற்காக அப்பகுதியில் உள்ள ஒட்டக பண்ணை ஒன்றில் ரகசியமாக புகுந்த அவர் பிறந்து சில நாட்களே ஆன ஒட்டக குட்டி ஒன்றை திருடியுள்ளார்.

அதை அவரது காதலிக்கு பரிசளித்த நிலையில் ஒட்டகக்குட்டியை காணவில்லை என பண்ணை உரிமையாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த இளைஞர் ஒட்டகக்குட்டியை மீண்டும் பண்ணை அருகே விட்டுவிட்டு போலீஸுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

போன் செய்த இளைஞரை போலீஸ் பிடித்து விசாரிக்க முதலில் முன்னுக்கு பின் முரணாக உளறிய அவர் இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் ஒட்டகத்தை திருடிய காதலனையும் அதை பரிசாக பெற்ற காதலியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.