ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 நவம்பர் 2016 (16:35 IST)

துபாய் எமிரேட்ஸ்: 50 லட்சம் பூக்களால் மலர் விமானம் (வீடியோ)

துபாயில் உள்ள பிரபல பூங்காவில், ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘எமிரேட்ஸ்’ ஏர்பஸ் விமானத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
 

 

 
72.93 மீட்டர் நீளம், 10.82 மீட்டர் உயரத்துடன், 24.21 மீட்டர் உயர இறக்கையுடன் சுமார் 30 டன் இரும்பு மற்றும் பலகைகளை கொண்டு 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விமானத்தின் மேல்பாகம் முழுவதும் கண்ணைக்கவரும் ஏழுவகைகளை கொண்ட வண்ணமயமான செடி, கொடிகள், 50 லட்சம் மலர்கள் பதிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு தேவையான பூச்செடிகள் எல்லாம் ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்தின் பண்ணையில் பதியமிட்டு இந்த அலங்கார விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை (27-ம் தேதி) இந்த மலர் விமானம் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.